ஆட்சியை கவிழ்த்தால் நாளை நமக்கும் அதே கதிதான் – ஸ்டாலின் ஓப்பன் டாக்

குதிரை பேரம் நடத்திக் கொண்டிருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களை நம் பக்கம் இழுத்து ஆட்சியை கவிழ்தால், நாளை நமக்கும் அதே கதிதான் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளிப்படையாக கூறியுள்ளார்.

ஜெ.வின் மறைவிற்கு பின், திமுக தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் இந்நேரம் ஆட்சியை கவிழ்த்திருப்பார் என அரசியல் தலைவர் முதல் பொதுமக்கள் வரை பலரும் பேசத் தொடங்கினர். இதற்கு ஸ்டாலின் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, கலைஞரும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது எங்களை அழைத்த அவர் “ஜெயலலிதா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். விபரீதமாக ஏதேனும் நடந்தால் அதிமுக உடையும். அதை நாம் வேடிக்கைதான் பார்க்க வேண்டுமே தவிர அதைப் பயன்படுத்தி கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்கக் கூடாது” என எங்களுக்கு உத்தரவிட்டார்.

நாங்கள் நினைத்திருந்தால் ஒரு நிமிடத்தில் ஆட்சியை கவிழ்த்திருப்போம். ஏனெனில், கூவத்தூரில் எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டது. அப்போது, சில எம்.எல்.ஏக்களை எங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை கலைத்திருக்க முடியும். ஆனால், விலை போகும் அந்த எம்.எல்.ஏக்கள் நம் பக்கம் இருந்தால், தற்போது அவர்களுக்கு ஏற்பட்ட நிலைமைதான் திமுகவிற்கும் ஏற்பட்டிருக்கும். அதை மக்கள் ஏற்க மாட்டார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைத்தால்தான் நீண்ட வருடங்கள் அது பாதுகாப்பாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY