ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்பதற்கு பொதுமக்களுக்கு உரிமையுள்ளது

ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்பதற்கு பொதுமக்களுக்கு உரிமையுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வணிக சபையின் ஊழியர்களுடன் நேற்று (07) கொழும்பில் இடம்பற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மக்கள் தெரிவு செய்யும் ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்பதற்கு அவர்களுக்கு சட்டரீதியான உரிமை உள்ளதாக கூறினார்.

நாட்டில் அவ்வாறான நிலைமை ஏற்பட வேண்டும் என தெரிவித்த அவர் பணம் இல்லாமை மாத்திரம் வறுமை என வரையறுக்கப்படாது எனவும் நாட்டின் பல்வேறு துறைகளை ஒப்பிடும் போது வறுமைக்கு மிகுந்த நாடாக இலங்கை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

நாட்டை செல்வமிக்க நாடாக எவ்வாறு மாற்றுவது அதேபோல் ஏழ்மையில் வாழும் மக்களை எவ்வாறு அதிலிருந்து மீட்டெடுப்பது என்பதே தனது பொருளாதார கொள்கை எனவும் அதற்காக சரியான நோக்கத்தையும், திட்டத்தையும் முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அரச சேவைகளின் ஊடாக மூன்று பிரதான சேவைகளை மக்களுக்கு வழங்க முடியும் எனவும் அவையாவன கல்வி, சுகாதாரம் போக்குவத்து துறை ஆகியன எனவும் குறிப்பிட்டார்.

அதில் கல்வித்துறையின் பல பிரிவுகளை முன்னேற்ற கூடிய பல திட்டங்களை தான் முன்வைத்துள்ளதாகவும், அதேபோல் தற்போது பெர்து போக்குவரத்தை 52 வீதமானோர் பயன்படுத்துவதாகவும் அதனை 80 வீதமாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.