ஆசிய விளையாட்டுப் போட்டி: சீனா தொடர்ந்தும் முதலிடத்தில்

இந்தோனேசியாவின் நடைபெற்றுவரும் ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் சீனா தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. 65 பதக்கங்களுடன் சீனா தொடர்ந்தும் பதக்கப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

சீனாவுக்கு இதுவரை 32 தங்கப் பதக்கங்களும், 21 வௌ்ளிப் பதக்கங்களும், 12 வெண்கலப் பதக்கங்களுக்கும் கிடைத்துள்ளன. இரண்டாவது இடத்தில் ஜப்பான் உள்ளது. ஜப்பானுக்கு இதுவரை 14 தங்கப் பதக்கங்களும், 18 வெள்ளிப் பதங்கங்களும், 20 வெண்கல பதக்கங்களும் கிடைத்துள்ளன.

மூன்றாவது இடத்தில் நீடிக்கும் கொரியா 9 தங்கம், 12 வெள்ளி மற்றும் 15 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக மொத்தம் 34 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 12 பதக்கங்களை வென்றுள்ள இந்தினோஷியா மூன்றாம் இடத்திலும், 10 பதக்கங்களை சுவீகரித்துள்ள இந்தியா ஏழாவது இடத்திலும் உள்ளன.

ஆசிய மெய்வல்லுனர் வீர, வீராங்கனைகளுக்கு இடையில் நடத்தப்படும் இந்த விளையாட்டு போட்டியில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா மற்றும் இலங்கை உள்பட 45 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த போட்டிகளில் சுமார் 10 ஆயிரம் வீர வீராங்கனைகள் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.