அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், குழு கெப்டன் சீன் அன்வின் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியும் மற்றும் கொவிட் – 19 எதிர்பாரா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இராணுவ தலைமையகத்தில் நேற்று (27) சந்தித்தார்.

தளபதி மற்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய இருவரும் இருதரப்பு முக்கியத்துவம், பரஸ்பர ஆர்வம் மற்றும் கொவிட்-19 தொற்று நோயானது இங்கு மற்றும் அவுஸ்திரேலியாவில் பரப்புவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்தனர்.

இவ் நல்லெண்ண வருகையின் அடையாளங்களாக பாதுகாப்பு ஆலோசகரும் இராணுவத் தளபதியும் நினைவுச்சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.