அலைகள் ஓய்வதில்லை இரண்டாம் பாகத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகள்

201608041358218495_Bharathiraja-Introduce-Livingston-Daughter_SECVPF.gifபாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக், ராதா நடிப்பில் 1981-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அலைகள் ஓய்வதில்லை’. இப்படத்தில்தான் கார்த்திக், ராதா இருவருமே அறிமுகமானார்கள். அதன்பிறகு, தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன், நாயகிகளாக வலம் வந்தனர்.

இந்நிலையில், 35 வருடங்களுக்குப்பின் அப்படத்தின் 2-வது பாகத்தை இயக்க பாரதிராஜா ஆர்வம் காட்டி வருகிறார். காதலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக இயக்குநர் வசந்தின் மகன் ரித்விக் வருண் அறிமுகமாகிறார்.

ரித்விக் வருண் ஏற்கெனவே வசந்த் இயக்கி வெளிவந்த ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்தின் மூலமே சினிமாவுக்கு இயக்குனர் சிகரம் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த படத்தில் ரித்விக் வருண் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இந்நிலையில், இந்த படத்திற்கான ஹீரோயினை பாரதிராஜா வெகுநாட்களாகத் தேடி வந்தார். ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் கார்த்திக், ராதாவை என்ற புதுமுகங்களை அறிமுகப்படுத்தியதால், இந்த படத்திலும் புதுமுகத்தையே அறிமுகம் செய்ய நினைத்திருந்தார் பாரதிராஜா.

அதன்படி, தற்போது நடிகர் லிவிங்ஸ்டன் மகளை சமீபத்தில் பார்த்த பாரதிராஜா அவரையே இந்த படத்துக்கு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்து விட்டதாகக் கூறுகின்றனர். விரைவில் இப்படம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY