அலரி மாளிகை வாயிலில் துப்பாக்கிச் சூடு – அதிரடிப்படையை சேர்ந்தவர் பலி

சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ வதிவிடமான அலரி மாளிகை வாயிலில் உள்ள சோதனைச்சாவடியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அலரி மாளிகையின் முன்பாக, உள்ள சிறப்பு அதிரடிப்படையினரின் சோதனைச்சாவடியில் இன்று முற்பகல் 8.35 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.

சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த தில்ருக்ச சமரசிங்க என்ற கொன்ஸ்டபிளே, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானார்.

அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தினால் அலரி மாளிகைப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.