அறிக்கை முழுமையாக வந்தவுடன் நடவடிக்கை எடுங்கள்- பிரதமர் பணிப்பு

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை வெளியிடப்பட்டவுடன் நாணயச் சபையுடன் கலந்துரையாடி அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கி ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியிடம் பிரதமர் இந்த பணிப்புரையை விடுத்திருக்கிறார்.

LEAVE A REPLY