அரையிறுதிக்குள் அடியெடுத்துவைத்தார் டேனியல் மெட்வேடவ்!

உலகின் தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில், ரஷ்யாவின் டேனியல் மெட்வேடவ் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

‘டோக்கியோ 1970’ பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில், ரஷ்யாவின் டேனியல் மெட்வேடவ் மற்றும் அர்ஜென்டீனாவின் டீகோ ஸ்வார்ட்ஸ்மான் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், டேனியல் மெட்வேடவ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில், டேனியல் மெட்வேடவ், ஸ்பெயினின் ரபேல் நடாலை எதிர்கொள்ளவுள்ளார்.