அருவி படத்திற்கு பிறகு 150 கதைகளை நிராகரித்த அதிதி பாலன்

கடந்த ஆண்டு இறுதியில் வெளியான அருவி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்ணாக நடித்து அசத்தியிருந்தார். படத்துக்கு, முக்கியமாக அதிதியின் நடிப்புக்கு பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்தன. அந்த படம் வெளியாகி ஆறு மாதங்கள் ஆகியும் அடுத்து படம் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. விசாரித்தால் அவர் இந்த ஆறு மாதங்களில் சுமார் 150 படங்களை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.

அருவி மூலம் தனக்கு கிடைத்த நல்ல பெயரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். எனவே கதை கேட்கும்போதே மிகுந்த கவனமாக கேட்கிறாராம். வித்தியாசமான, அதே நேரத்தில் தனக்கு நடிக்க முக்கியத்துவம் உள்ள கதைகளில்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். அவரின் நண்பர்கள் இப்படியே சில மாதங்கள் போனால் உன்னை எல்லோரும் மறந்து விடுவார்கள்.

எனவே வருகிற படங்களை ஒப்புக்கொள் என்று அறிவுரை சொல்லி இருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகள் சும்மாவே இருந்தாலும் பரவாயில்லை. பத்தோடு பதினொன்றாக ஒரு படத்தில் நடிக்க மாட்டேன் என்று அதிதி சொல்லி வருகிறாம்.

LEAVE A REPLY