அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

நிதியமைச்சர் பதவியிலிருந்து அருண் ஜெட்லி விலக வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் விஜய் மல்லையாவுடனான சந்திப்பு தொடர்பாக அருண் ஜெட்லி உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மோசடி குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு கோரி இந்தியா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த விஜய் மல்லையா, நாட்டைவிட்டு செல்லும் முன்னர் நிதி அமைச்சரை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெறவில்லை என அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச்செல்ல அருண் ஜெட்லி உதவியதாக பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.