அரச பழிவாங்களுக்கு உள்ளானவர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்

images1994 – 2014ஆம் காலங்களில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கள் தொடர்பில் 31 897 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீன்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளில் 6000 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீன்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதனின் தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையமாக சிறிகொத்தாவிற்கு கிடைக்கப்பெற்ற இந்த முறைப்பாடுகள் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விசாரணைக் குழுவின் தலைவராக அமைச்சின் செயலாளர் எம்.எம். நயிமுதீன் நியமிக்கப்பட்டுள்ளதோடு குழுவின் செயலாளராக எஸ்.ஆர் தூல்லேவ மற்றும் அமைப்பாளராக சந்திமால் மென்டிஸ் ஆகியோர் செயற்படுகினறனர்.

இதேவேளை சிறிகொத்தா அரசியல் பழிவாங்கள் குழுவின் எச்.ஏ.பி பிரிஸ் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீன்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் மாவட்ட ரீதியில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்.

கொழும்பு மாவட்டம் – 238

கம்பஹா மாவட்டம் – 307

களுத்துரை மாவட்டம் – 130

கண்டி மாவட்டம் – 893

மாத்தளை மாவட்டம் – 214

நுவரெலியா மாவட்டம் – 199

பதுளை மாவட்டம் -124

மொனராகலை மாவட்டம் – 49

அநுராதபுரம் மாவட்டம் – 555

பொலநறுவை மாவட்டம் – 303

ஹம்பாந்தோட்டை மாவட்டம் – 128

மாத்தறை மாவட்டம் – 142

காலி மாவட்டம் – 175

குருநாகல் மாவட்டம் – 576

புத்தளம் மாவட்டம் – 425

கேகாலை மாவட்டம் – 202

இரத்தினபுரி மாவட்டம் – 266

திருகோணமலை மாவட்டம் – 23

வன்னி மாவட்டம் – 4

அம்பாறை மாவட்டம் – 62

மட்டக்களப்பு மாவட்டம் – 29

LEAVE A REPLY