அரச சொத்துக்கள் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுவது குறித்து பிரதமர் நடவடிக்கை

அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான எம்பிலிபிட்டிய – யோதகம உதாகம்மான காணியில் அமைந்துள்ள தலைமைத்துவ அபிவிருத்தி தேசிய மத்திய நிலையத்தின் மூன்றாவது மாடியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள குடும்பங்கள் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த நேற்று முன்தினம் அங்கு சென்றிருந்தார்.இதனையடுத்தே பிரதமர் நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.