அரசைக் கவிழ்க்கும் அவசியம் இல்லை!

யுத்த பாதிப்புக்களே வடமாகாண கல்வி வீழ்ச்சிக்கு காரணம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இணுவில் ,இந்துக் கல்லூரியின் தொழில்நுட்ப கட்டடமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு ஊடகவியலாளருக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசை கொண்டு வந்து மூன்று மாதங்களே ஆன நிலையில் உடனடியாக ரணில் விக்ரமசிங்கவின் அரசை எதிர்த்து வாக்களிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.