அரசு நல்லெண்ணத்தை வெளிப்படுத்தட்டும்

tkn-10-28-rs-50-hucநில ஆக்கிரமிப்பை நிறுத்தி தமிழ் மக்களுக்கு அரசு நல்லெண்ணத்தை வெளிப்படுத்தட்டும்!

கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் என்னையும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக தெரிவு செய்வதற்கு வாக்களித்த முல்லைத் தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

1965ம் ஆண்டு சிங்கப்பூர் மலேசி யாவிடமிருந்து பிரிந்த போது அதன் பொருளாதாரம் எமது நாட்டை விட பின் தங்கிய நிலையிலேயே இருந்தது. அங்கு சீன, மலாய், தமிழ் மொழிகள் அரச மொழிகளாக்கப்பட்டன.

அவர்களு டைய தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை பாவித்து வந்தார்கள். மறைந்த தலைவர் லீகுவான்யூ அவர்களால் முன்னெடுக் கப்பட்ட சகல மக்களுக்குமான சமத்துவக் கொள்கை, அந்த நாடு வெகு விரைவில் சகல மக்களின் ஒத்துழைப் போடு பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைவதற்கு வழிவகுத்தது. அவர்கள் முழுமையான அர்த்தபுஷ் டியான வரவு செலவுத் திட்டங்களை நிறைவேற்றி வெற்றிபெற்றார்கள்.

எமது முன்னைய சிங்களத் தலைவர்கள் சிங்களம் மட்டும் என்ற அரச கரும மொழி சட்டத்தை 1956 ஆம் ஆண்டு பாராளு மன்றத்திற்கு கொண்டு வந்து நிறைவேற் றினார்கள்.

“Sinhala only act formally the official langusge act No. 33 of 1956 was an act passed in parliament of Ceylon in 1956. the act failed to give official recognisation to tamils.

எமது இந்த நாட்டில் சிங்கள மொழி பேசுபர்கள் 70 வீதமாகவும் தமிழ் மொழியைப் பேசுபவர்களான இலங்கைத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், முஸ்லிம் மக்கள், மொத்தமாக 29 வீதமாகவும் இருந்தபோதும் அன்றைய சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்க மறுத்தார்கள்.

அன்றைய சிங்களத் தலைவர்களின் தவறுதல்களால், தமிழர்கள், தமிழ் மொழியின் அந்தஸ்து பூர்வீக கலாசார அடையாளங்கள், தமது நில உரிமைகள், கோள்விக்குள்ளாக்கப்படுவது பற்றி அதிகமாக சிந்திக்கத் தொடங்கினார்கள்.

மொழிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை எமது பொருளாதார அபிவிருத்திக்கு கொடுக்க தவறியிருந்தோம்.

“the Banda – Chelva Pack was an agreement signed between the Prime Minister of Sri lanka S.W.R.D. Bandaranayake and the Leader of the Main Tamil Political Party in Sri lanka S.J.V.Chelvanayagam on 26th of July 1957. It advacated, creation of a service of Regional Council in Sri lanka as mean to givig a certain leve of autonomy of tamil people of the country.

பண்டா – செல்வா ஒப்பந்தம் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் 1958 ஆம் ஆண்டு கிழித்து எறியப்பட்டது. இதனால் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் மோசமான நிலையை அடைந்தது. இதன் விளைவாக புத்த பிக்கு ஒருவரால் 1959 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பண்டாரநாயக்க சுட்டுக் கொல் லப்பட காரணமாகியது.

இதன் மூலம் அமைதிப்பூங்காவாக இருந்த இலங் கையில், ஒரு பயங்க ரவாத ஆயுத தாக்கு தலைத் தொடங்கி வைத்த பெருமை குறிப்பிட்ட புத்த பிக்குவையே சாரும்.

1956 ஆம் ஆண்டு முதலாவது இனக்கலவரம் கிழக்கு மாகாணத்திலுள்ள கல்லோயா தமிழர்கள் குடியிருப்புக்கள் மீது சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் 150 மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

1958 ஆம் ஆண்டு கலவர மானது, தமிழ் பேசும் மக்களை நோக்கி மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்டது.

அதன் மூலம் 300 அதிகமான இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தொடர்ந்து 1977, 1981, 1983 என தமிழர் இனப்படு கொலைகள் நடந்தேறின.

இவற்றின் விளைவு தமிழ் இளைஞர்கள் தமக்கான தனித்து வமான வாழ்வை நோக்கி ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க வைத்தது.

தொடர்ந்த தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகள், வட்டுக் கோட் டைத் தீர்மானமாக 1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் சுதந்திர தமிழ் ஈழத் தாயகக் கோரிக் கையாக உருவெடுத்தது.

இதன் பின்னர் 1987 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்ட மானது தமிழர்களின் குறைந்த பட்ச விருப்புக்களான காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்தில் கொண்டு வரும் என சர்வதேசம் நம்பியது.

13வது திருத்தத்தில் உள்ள காணி அதிகாரமானது வட மாகாணத்தில் முதலமைச்சரின் கீழ் உள்ளதாக கருதப்ப டுவதாக இருப்பினும் மகாவலி அதிகார சபை என்ற போர்வையில் ஒரு லீட்டர் மகாவலி நீர் கூடச் செல்லாத வட மாகா ணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழுள்ள கொக்கிழாய், கொக்குத் தொடுவாய், கருநாட்டங்கேணி ஆகிய கிராம மக்களின் காணிகள் பறித்தெடுக் கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் செய்வதற்கு வழிவகுத்துள்ளது.

1984 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக மேற்குறிப்பிட்ட கிராமத்தி லிருந்து மக்கள் வெளியேறிய பின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயல் காணிகள் 1987 ஆம் ஆண்டிலிருந்து சிங்கள மக்களுக்கு பகுதி பகுதியாக வருடாந்த அனுமதிப்பத்திரம் மூலம் வழங்கப்பட்டது.

இதன் உச்சக்கட்டமாக 2014 ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் சூட்சுமமிக்க காணி அனுமதிப்பத்திரங்கள் முன்னாள் ஜனாதிபதி அவர்களால் நேரடியாக விஜயம் செய்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

எனவே நான் இந்த பாராளுமன்றத்தை கேட்டுக்கொள்வது யாதெனில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு வர்த்தமானி பிரகடனம் மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தை மேற்கொண்டு நடைமுறைப் படுத்துவதற்கு முன்னர் 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் வட மாகாண முதல மைச்சருக்கு வழங்கப்பட்ட காணி அதிகாரத்திற்கு கெளரவமளித்து முதலமை ச்சரின் சிபார்சைப் பெற வேண்டும் என இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்ந்து தமிழ் மக்களுக்கு இழைக் கப்படும் அநீதிகளாக காணி, பொலிஸ் மற்றும் வடக்கு, கிழக்கு இணைப்பு என்பன சீர்குலைக்கப்பட்டு 13வது திருத்தமானது கேள்விக் குறியாக்கப் பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய் க்காலில் நிறைவேறிய பாரிய தமிழ் இன படுகொலைகளின் முடிவிலும் கூட ஒரு சுதந்திரமான தமிழரின் வாழ் வுக்கான உரித்துக்கள் மறுக்கப்பட்டு வருகின்றது என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் முடிவில் இலங்கையில் ஐ.நா. சபை செயலாளர் நாயகம் பாங்கிமூன் அவர்க ளுடன் விடுத்த கூட்டறிக் கையின் அடிப்படையிலும், இலங்கை அரசு ஐ.நா. சபையில் ஏனைய சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து கூட்டாக நிறை வேற்றிய பிரேரணையின் அடிப்படையிலும் பின்வரும் விடயங்களை உடனடியாக நிறைவேற்றி உதவுமாறு இச்சபையை கேட்டுக்கொள்கிறேன்.

இதுவே எமது பொருளாதார அபிவிருத்திக்கும் இந்த வரவு செலவுத்திட்ட வெற்றிக்கும் வழிவகுக்கும்.

01. அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குக

முன்னைய ஜே.வி.பி. போராளிகளுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புப் போல் தற்போது சிறைகளில் வாடும் 300க்கும் அதிகமான தீர்ப்பு வழங்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட, வழக்குகள் நிலுவையிலுள்ள வழக்குகள் தொடரப் படாத அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பு என்ற அடிப்படையில் அவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

02. நில ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும்

வடமாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத் தினரால் அபகரிக்கப்பட்ட பொது மக்களின் அரச திணைக்களங்களின் பொது சபைகளுக்கு உரித்தான காணிகள் உடன் விடுவிக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு அரசின் நல்லெண்ணம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக மேற்படி விடயம் சம்பந்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடி யிருப்பு கிராமத்தில் அபகரிக்கப்பட்ட 17 ஏக்கர் காணிகளையும் இராணுவத்தால் முற்று முழுதாக அபகரிக்கப்பட்ட கேப்பாபுலவு கிராமத்தையும் விடுத்து பொதுமக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

03. மீள்குடியேற்றம்

அர்த்தபுஷ்டியான தமிழர் மீள்வாழ்வு ஏற்படுத்தப்பட உடன் ஜ.நா. மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை இலங்கையில் செயல்பட அனுமதியளித்து மக்கள் மீண்டும் தங்களது சொந்த கால்களில் மீண்டெழும் வரையான நிவாரண நிதி வள, தொழில் வள, உளநல உதவிகளை செய்வதற்கு முன்வர வேண்டும்.

04. இராணுவக் குறைப்பு

இலங்கையின் மொத்த இராணுவத்தில் மூன்றில் இரண்டு மடங்கு இராணு வத்தினர் தமிழர் வாழும் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு பகுதிகளில் நிலைகொண்டுள்ளனர்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து ஏழாவது ஆண்டு தொடங்குகின்ற போதும் அளவுக்கதிகமான இராணுவத்தினர் மீளப்பெறப்படவில்லை.

இது தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது.

தேவைக்கதிகமான இராணுவம் படிப்படியாக மீளப்பெறப்பட வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும்.

05. இன அடையாளங்களை குறித்து நிற்கும் திருத்தலங்கள்

பாதுகாக்கப்பட வேண்டும்

மன்னார் மாவட்டத்திலுள்ள திருகேதீ ஸ்வரம் இந்து மக்களின் ஒரு புனித பிரதேசமாகும்.

அங்கு பலாத்காரமாக எடுக்கப்பட்ட காணிகளில் ஒரு பெளத்த விகாரை அமைக்க முற்படுவது மத முரண் பாடுகளைத் தோற்றுவித்து வருகிறது. இந்த நடவடிக்கை உடன் நிறுத்தப்பட வேண்டும்.

மேலும் கொக்குளாய் பிரதேசத்தில் அதிகப்படியாக கிறிஸ்தவ சிங்கள மக்களும், இந்து முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்ற போதிலும் பத்து பெளத்த குடும்பங்களுக்காக பாரிய அளவில் ஒரு பெளத்த விகாரையை பொது மக்களின் காணிகளையும் வைத்தியசாலைக் காணியையும் அபகரித்து அமைக்க முற்படுவதை சுட்டிக்காட்ட விரும்பு கிறேன்.

மேலும் இவ்விடயத்தில் நீதிமன்ற தடையையும் மீறி கட்டட வேலைகள் இராணுவத்தின் துணையுடன் நடை பெறுவது என்பது நீதித்துறையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

06. பொறுப்புக் கூறல் ஊடாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

இலங்கையில் இறுதிப்போரில் போர் மரபுகள் பின்பற்றப்படவில்லை என ஐ.நா. அறிக்கை வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே பழைய காயங்களுக்கும் வலி இருக்கும் என்று ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

உண்மையான நோக்குடன் பொற்றுப்புக் கூறல் நல்லிணக்கத்திற்கு நம்பகமான செயல்முறை ஏற்படுத்துவதன் மூலம் இந்த நாடு நீண்ட கால இன முரண் பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு இறுதி தீர்வை நோக்கி பயணிக்க முயற்சி எடுக்க வேண்டும் என கோரி நிற்கிறேன்.

LEAVE A REPLY