அரசியல் பிரவேச அறிவிப்பு, கருணாநிதியுடன் சந்திப்பு: ரஜினியின் ப்ளான் என்ன??

திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்துள்ளார். அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினி அறிவித்த பின்னர், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 31 ஆம் தேதி அறிவித்தார். மேலும், வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக கூறியுள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு வந்தாலும், துணிச்சலுடன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துள்ளார். ரஜினியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். இது குறித்து ரஜினி பேட்டியளித்ததாவது, திமுக தலைவர் கருணாநிதி என்னுடைய நண்பர். அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவரது உடல் நிலை குறித்து விசாரித்தேன்.

மேலும், எனது அரசியல் பிரவேசத்தை குறித்து அவரிடம் தெரிவித்து ஆசி பெற்றேன் என தெரிவித்துள்ளார்.
ஆன்மிக அரசியல் என்று குறிப்பிட்டு வரும் ரஜினி, திராவிட கொள்கைகளை விதைத்த கருணாநிதியை சந்தித்துள்ளது தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.

LEAVE A REPLY