அரசியல் நெருக்கடி ; மைத்திரி, ரணிலை சந்தித்தனர் இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்க தூதர்

நல்லாட்சி அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையையடுத்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் அவசரமாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளி்கையிலும் இரண்டு தூதுவர்களும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

இன்றுகாலை இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினார். அத்துடன் மாலை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்து பேச்சு நடத்தினார். அதேபோன்று இரண்டு நாடுகளினதும் தூதுவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவின் பின் பிரதமர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகளால் அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்கும் நோக்கிலேயே அமெரிக்க மற்றும் இந்திய தூதுவர்கள் பிரதமரையும் ஜனாதிபதியையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களின் சந்திப்புகள் நீண்ட நேரம் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY