அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

download-12-720x480அனைத்து காணாமலாக்கல்களை வெளிப்படுத்துமாறு கோரியும் அரசியல் கைதிகளை விடுதலையை செய்யுமாறு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பில் யாழின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY