அரசியலில் இருந்து விலகுவதாக சுஜீவ சேனசிங்க அறிவிப்பு

அரசியலில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச் செயலாளர் சுஜீவ சேனசிங்க அறிவித்துள்ளார்.

அத்தோடு கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் இராஜினாமா செய்வதாகவும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.