அரசியலமைப்பு பேரவை குறித்த ஜனாதிபதியின் குற்றச்சாட்டிற்கு சபாநாயகர் பதிலடி!

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் அரசியலமைப்பு பேரவைக்கு மிகவும் பொருத்தமானவர்களே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவைக்கான நியமனம் தொடர்பான ஜனாதிபதியின் குற்றச்சாட்டை நிராகரித்து இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த சபாநாயகர், ”தெரிவு நடைமுறையில் சிரேஷ்டர்கள் என்ற விடயம் மாத்திரம் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.

ஜனாதிபதியின் பட்டியலிடப்பட்ட பரிந்துரைக்கமையவே ஒவ்வொரு நியமனமும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவை எவரையும் தன்னிச்சையாக நியமிக்கவில்லை.

ஜனாதிபதியின் பரிந்துரைகளுக்கமைய பொருத்தமான உறுப்பினர்களை தெரிவுசெய்வதில் எவ்வித அநீதியும் இழைக்கப்படவில்லை. நாம் இதில் எவ்வித தவறுகளையும் காணவில்லை” எனத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார். இதன்போது, அரசியலமைப்பு சபைக்கான நியமனத்தில் சிரேஸ்ட உறுப்பினர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.