அரசியலமைப்பிற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள் – இராதாகிருஸ்ணன்

புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் செயற்றிட்டத்துக்கு தமிழ் பேசும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்புக்களை வழங்குவர் என அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சர் இராதாகிருஸ்ணன், தெரிவித்துள்ளார்.

நுவரெலிய, ஒலிபன்ட் தமிழ் வித்தியாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இனப்பிரச்சினையைத் தூண்டிவிட்டு நாட்டை அழிவு பாதையில் கொண்டு செல்ல சில அசுரர்கள் நமது நாட்டிலும் உள்ளனர்.

இலங்கையிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் ஒரே மாதிரியான நீதி வரைபு இருக்க வேண்டுமென உத்தேச அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் நாட்டை பிளவுபடுத்தவே அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதாக எதிர்க்கட்சியினர் கூறி, அதனை உதாசீனப்படுத்துகின்றனர்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.