அரசாங்கத்திலிருந்து விலகப்போவதாக மைத்திரிக்கு ரணில் எச்சரிக்கை!

நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சிக்கு தொடர்ந்தும் அழுத்தங்களும் தொந்தரவுகளும் கொடுக்கப்பட்டுவந்தால் எதிர்வரும்ஜனவரியிலிருந்து அரசாங்கத்திலிருந்து விலகுவதாக சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவைதனியே சந்தித்து இந்நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 ஆசனங்கள் இருப்பதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு 35 ஆசனங்கள் மாத்திரமே உள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை கருத்தில் கொள்ளாது சிறிலங்கா சுதந்திரக் கட்சி அடிக்கடி தன்னிச்சையான முடிவுகைள எடுப்பதாக ரணில் விக்கிரமசிங்க ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY