அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தயார்

பாராளுமன்றத்தில் தற்போது அரசாங்கம் வரவு செலவு திட்டத்தை முன்வைக்குமாயின் எதிர்க்கட்சி அதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மீரிகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்த பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என அரசாங்கம் தெரிவித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்காக ஏப்ரல் மாதம் வரையில் காத்திருக்க அவசியம் இல்லை எனவும் எதிர்வரும் வாரத்திற்குள் அதற்கு தேவையான வாக்குகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.