அரசாங்கத்தின் மற்றுமோர் புதிய அறிவிப்பு!

அரசாங்க சேவையில் 180 நாட்களை பூர்த்தி செய்த அதிகாரிகளை நிரந்தர பணியில் அமர்த்தவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்ட காரியாலய உதவியாளர்கள் மற்றும் சாரதிகள் நிரந்தர பணியில் அமர்த்தப்படவுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.