அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை நாட்டை அழிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது – அனுரகுமார திசாநாயக

அரசாங்கம் கையாளும் பொருளாதாரக் கொள்கை நாட்டை அழிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போதே அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி – பிரதமர் மற்றும் அமைச்சர்கள் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு மக்கள் மீது பொருளாதார சுமையினை சுமத்துவதும், மக்களை கட்டுப்பாட்டுடன் இருக்கக்கூறுவதனையும் ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது.

1978 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேசத்தில் இருந்து இலங்கைக்கு வந்த புதிய தொழிநுட்ப தொழிற்சாலை ஒன்றை கூற முடியுமா உங்களால்? இருந்த அனைத்து தொழிற்சாலைகளையும் அழித்துவிட்டீர்கள். உங்கள் எவராலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.

மக்களிடம் இருந்து முழுமையாக பரித்துக்கொண்டு மிகக் சிறிய சலுகைகளையே மக்களுக்கு கொடுக்கிரீர்கள். உங்களின் கதைகள் அனைத்துமே கனவுகள் மட்டுமேயாகும்.

உங்களின் பொருளாதாரம் இந்த நாட்டினை அழிக்கும் வகையிலேயே அமையும்“ என தெரிவித்துள்ளார்.