‘அரசமைப்பை நிறைவேற்றி விட்டு வெளியேறினால் வெற்றியே’

தற்போதைய நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பை நிறைவேற்றி விட்டு, நாம் வெளியேறினால், அது எமக்கான வெற்றியென்றும் அப்படியில்லையாயின் அந்த பிரச்சினை எமது அடுத்த சந்ததியினருக்கும் தொடருமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரசமைப்பு தொடர்பில் பலரும் பல விதமான அபிப்ராயங்களைத் தெரிவிக்கின்றதாகத் தெரிவித்த அவர், சட்டவாக்க சபைக்கு இன்னும் அரசமைப்பு முன்வைக்கப்படவில்லை. யோனைகள் வந்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் வெவ்வேறு அபிப்ராயங்கள் முன்வைக்கப்படுகின்றன.அவை நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்.

இந்த புதிய அரசமைப்புத் தொடர்பில் தேரர்களின் அபிப்ராயங்களும் கிடைத்தன. அவர்கள் அனைவரினதும் கோரிக்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட சகல கட்சித் தலைவர்களையும் அழைத்து, இது தொடர்பில் கருத்துக்களை முன்வைப்பதற்காக இரண்டு நாள்களை ஒதுக்கி ஆதரவான, எதிரான கருத்துக்களையும் சிறுபான்மை கட்சிகளின் அபிப்பராயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடி முடிவுக்கு வருவது அவசியம் என்று அவர்கள் அபிப்ராயம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.