அமைச்சு பதவி பறிபோன விரக்தியில் பேசுகின்றார் – டக்ளசை கிண்டல் செய்த சார்ள்ஸ்

அமைச்சு பதவி பறிபோன விரக்தியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கூட்டமைப்பிற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, கூட்டமைப்பினை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே சார்ள்ஸ் நிர்மலநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சு பதவி பறிபோன விரக்தியில் பேசும் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்கள் குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை எனவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.