அமைச்சர் ஜோன்ஸ்டன் – தயா ரத்நாயக்க இடையில் வெடித்த மோதல்! ஊழியர்களைப் பயன்படுத்தி அனுப்பப்பட்ட மனு

துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் துறைமுக அதிகார சபையின் தலைவர் லெப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோருக்கு இடையிலான மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக அமைச்சர் ஜோன்ஸ்டன் வழங்கும் உத்தியோகபூர்வமற்ற உத்தரவுகளை தயா ரத்நாயக்க கவனத்தில் கொள்வதில்லை எனவும் கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் சம்பவம் துறைமுக அதிகார சபையின் அன்றாட நடவடிக்கைகளுக்கு தடையாக மாறியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் துறைமுக அதிகார சபையின் தலைவராக தயா ரத்நாயக்க எடுக்கும் தீர்மானங்களுக்கு நேரடியான தடைகளை ஏற்படுத்தி வருகிறார்.

தயா ரத்நாயக்கவின் தீர்மானங்களுக்கு எதிராக துறைமுக ஊழியர்களின் ஒரு தரப்பினரை பயன்படுத்தி அமைச்சின் செயலாளருக்கு மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தயா ரத்நாயக்கவின் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சருக்கும் துறைமுக அதிகார சபையின் தலைவருக்கும் இடையிலான இந்த மோதல் காரணமாக கொள்வனவுகள், கேள்வி மனு கோரல்கள் உட்பட பல நடவடிக்கைகளை மேற்கொள்வது ஊழியர்களுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் இராணுவ தளபதியாக தயா ரத்நாயக்க நேர்மையான அரச அதிகாரியாக அனைவரது நம்பிக்கைகளையும் வென்றெடுத்தவர் எனவும் கூறப்படுகிறது.