அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை முடிந்தது, ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரப்படும் : அமைச்சர்கள் உறுதி

Daily_News_5636516809464ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை முடிந்தது. ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும் எனவும் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அமைச்சர் பாண்டியன்: இளைஞர்களின் உணர்வுகளை மதிக்கிறோம் என அமைச்சர் பாண்டியன் தெரிவித்தார். நாடாளுமன்றம் துவங்குவதற்கு முன் மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் எனவும் அமைச்சர் பாண்டியன் உறுதியளித்தார்.

போராட்டக்குழு: அமைச்சர்கள் அளித்துள்ள வாக்குறுதியை நாங்கள் மதிக்கிறோம் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். பீட்டா அமைப்பை தடை செய்யுமாறும் போராட்டக்குழுவினர் வலியுறுத்தினார். முதல்வரின் அறிக்கைக்கு பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும். மேலும் மெரினாவில் போராட்டம் தொடரும் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY