அமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடாது! – அதிரடிப்படைக்கு உத்தரவு

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 85
அமைச்சர்களின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர், அமைச்சர்களை தவிர வேறு எவருக்கும் பாதுகாப்பு வழங்கக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய அமைச்சர்களை தவிர அவரது பணிக்குழுவினர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் தலைமையகம் அறிவித்துள்ளது.

மேலும் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கி செல்லும் வாகனங்களில் வெளியாரை ஏற்றிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாவலர்கள் அமைச்சர்களுக்கு மாத்திரமல்லாது அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் பயன்படுத்தப்பட்டமையை கவனத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY