அமைச்சரவைப் பேச்சாளர் பதவியிலிருந்து ஹெகலிய நீக்கம்

சிறிலங்காவின் அமைச்சரவைப் இணைப் பேச்சாளர் பதவியில் இருந்து, ஹெகலிய ரம்புக்வெல இன்று தொடக்கம் நீக்கப்பட்டுள்ளார். அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் மகிந்த சமரசிங்க கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

இடைக்கால அரசாங்கத்தில் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவி செல்லுபடியாகாது எனக் கருதப்படுவதால், ஊடக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்தும் கெஹலிய ரம்புக்வெல நீக்கப்படவுள்ளார் என்றும், மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அமைச்சரவையில் அங்கம் வகிக்காத- இராஜாங்க அமைச்சரான ரம்புக்வெல, அமைச்சரவைப் பேச்சாளராக அறிவிக்கப்பட்டமை முன்னரே சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.