அமெரிக்க முதல் பெண் மெலனியா டிரம்ப் எங்கே? யூகங்களை தூண்டும் ஊடகங்கள்

அமெரிக்க முதல் பெண் மெலனியா டிரம்ப் (வயது 48) கடந்த 25 நாட்களாக வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து அவர் தீங்கற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், மேலும் சிறு நீரக கோளாறு என யூகங்கள் கிளப்பப்பட்டு வருகின்றன.

மெலனியா டிரம்ப், மே 10 முதல் காணப்படவில்லை. வடகொரியாவால் விடுவிக்கப்பட்ட மூன்று அமெரிக்கப் பணயக் கைதிகளை ஜனாதிபதி வாழ்த்தும் நிகழ்ச்சியில் அவர் கடைசியாக கலந்து கொண்டார்.

சிறிது நேரத்திற்குள் அவர் வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஒரு தீங்கற்ற சிறுநீரக சிகிச்சைக்காக ஆவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்து இருந்தது.

அறுவை சிகிச்சை வழக்கமான இயல்பாக இருந்தாலும், மெல்னியா ஐந்து நாட்களுக்கு அங்கேயே தங்கியிருந்தார், மே 19 ம் தேதி வெள்ளை மாளிகையில் திரும்பினார்.

கனடாவில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் மெலனியா கலந்துகொள்ள மாட்டார் என ஞாயிறன்று அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபனி க்ரிஷாம் உறுதிப்படுத்தினார்.

மருத்துவ அறுவை சிகிச்சைக்குப் பின், டிரம்புடன் அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை.

சமீபத்தில் அவர் வெளியிட்டுயுள்ள டுவிட்டர் தவலில் “நான் ஊடகங்கள் மேலோட்டமாக செயல்படுவதை நான் காண்கிறேன், நான் எங்கே, நான் என்ன செய்கிறேன், நான் வெள்ளை மாளிகையில் என் குடும்பத்துடன் உள்ளேன். நான் நன்றாக உணர்கிறேன், கடினமாக உழைக்கிறேன். “என கூறி இருந்தார்.

LEAVE A REPLY