அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் – வைகோ கைது

12_vaiko_jpg_1650042fஇலங்கை தொடர்பிலான அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து, இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினையடுத்து வைகோ கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பாக பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் கொண்ட விசாரணையே போதும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைய கூட்டத்தில், அமெரிக்கா அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதனைக் கண்டித்து, சென்னை எழும்பூர் பகுதியில், வைகோ தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு வந்த பொலிசார் வைகோ உள்ளிட்டோரைக் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY