அமெரிக்க உயர்ஸ்தானிகர் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலைனா ஸ்ரெப்லிக்ஸ் இற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் போது தற்போதுள்ள அரசியல் நிலைமைகள் மற்றும் ஜெனிவா கூட்டத்தொடர் குறித்து கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.