அமெரிக்க உதவிச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான உதவி செயலாளர் ஆர்.கிளார்க் கூப்பர் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அதற்கமைய அவர் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவரது பயணம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 29 முதல் ஜூன் 7ஆம் திகதிவரை அவர் இலங்கை, சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது அவர் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பாதுகாப்பு, சமாதானம், நிலக்கண்ணிவெடிகள் அகற்றல் மற்றும் காணாமற்போனோர், ஆட்கடத்தல், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பாகவும் இந்த விஜயத்தின்போது கலந்துரையாடவுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.