அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் அதிகாரி இலங்கை விஜயம்

PhillipsMaconஅமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் மற்றுமொரு உயர் நிலை அதிகாரியான மெக்கோன் பிலிப்ஸ் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் சர்வதேச தகவல் திட்ட பிரிவின் பணிப்பாளரான மெக்கோன் பிலிப்ஸ் அமெரிக்க ஜனாhதிபதி பராக் ஒபாமாவின் கண்காணிப்பின் கீழ் வெள்ளை மாளிகையில் செயற்படும் இணைய இராஜதந்திர பிரிவின் பிரதானியாகவும் செயற்படுகின்றார்.

இலங்கை மற்றும் இந்தியவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை கடந்த வாரம் நடுப்பகுதியில் ஆரம்பித்த மெக்கோன் பிலிப்ஸ் இந்தியாவில் பல தரப்பு சந்திப்புகளில் கலந்து கொண்டிருந்த நிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

பல்துறைசார் உறவுகளை இலங்கையுடன் தீவிரப்படுத்தி வரும் அமெரிக்கா தனது இராஜாங்க தினைக்களத்தின் அதிகாரிகளை தொடர்ந்தும் இலங்கைக்கு அனுப்பி வருகின்றது.
அந்த வகையில் அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் சர்வதேச தகவல் திட்ட பிரிவின் பணிப்பாளரான மெக்கோன் பிலிப்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY