அமெரிக்கா மற்றும் சீன இராஜதந்திரிகளுடன் வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல்

அமெரிக்கா மற்றும் சீனா இராஜதந்திரிகள் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் அலிஸ் வெல்ஸ் ஆகியோர் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் அலிஸ் வெல்ஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் கலந்துரையாடினார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேபோன்று சீன வெளியுறவு அமைச்சருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தி முதலீட்டு திட்டங்களில் தினேஸ் குணவர்தன கவனம் செலுத்தியுள்ளார் எனவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.