அமெரிக்காவில் பாரிய வெடிப்பு! – ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மசச்சுசெட்ஸ் மாநிலத்தில் ஏற்பட்ட பல்வேறு வெடிப்புச் சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் மசச்சுசெட்ஸ் மாநிலத்தில் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மூன்று நகரங்களில் வீடு, வர்த்தக நிலையங்கள் உட்பட 40 கட்டடங்களில் நேற்று (வியாழக்கிழமை) பாரிய வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறித்த வெடிப்பில் 10இற்கும் அதிகமானவர்கள் தீக்காயங்களுக்கு உட்பட்ட நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

வெடிப்பையடுத்து குறித்த 3 நகரங்களிலுள்ள மக்கள் உடனடியாக தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறியுள்ளனர்.

குறித்த பாரிய வெடிப்பானது, எரிவாயு விநியோகிக்கப்படும் குழாயில் ஏற்பட்ட கசிவினாலேயே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த மூன்று நகரங்களிலிலும் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் பணியில் 70 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.