அமெரிக்காவில் பயங்கரம்: தாய் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சொந்த தம்பியை சுட்டுக்கொன்ற 10 வயது சிறுவன்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள மேற்கு மிப்ளின் நகரில் வசிக்கும் பெண்மணி தனது பாதுகாப்புக்காக உரிய அனுமதியுடன் துப்பாக்கி வைத்திருந்திருக்கிறார். நேற்று காலை அந்த பெண்ணின் இரு மகன்களும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.

அப்போது, 10 வயதான மூத்த மகன் தாய் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தனது 6 வயது தம்பியின் தலையில் சுட்டுள்ளான். இதனையடுத்து, தனது தாய்க்கு போன் செய்து தம்பியை சுட்ட விவகாரத்தை கூறியுள்ளான். ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

சிறுவன் ஏன் தனது தம்பியை துப்பாக்கியால் சுட்டான்? என்பது குறித்து விசாரனை செய்து வருவதாக அந்நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY