அமெரிக்கத் தூதுவருடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்திப்பு!

இலங்கை அரசாங்கம் ஜெனிவா கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் வலியுறுத்தியுள்ளார்.அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப்புக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து தமது டுவிட்டரில் அமெரிக்க தூதுவர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,வட மாகாண முதலமைச்சருக்கு பொங்கல் வாழ்த்துக்களை கூறியதாக தெரிவித்துள்ளார்.அத்துடன், வட மாகாணத்தின் பிரச்சினைகள் குறித்து சிறந்த கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். நீடித்த தேசிய நல்லிணக்கத்துக்காகவும், அனைத்து பிரஜைகளினதும் வளமான எதிர்காலத்துக்காகவும், இலங்கை தமது ஜெனிவா கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டிய அவசியம் உள்ளதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY