அனைத்து இனத்தவர்களும் சரியான அரசியல் முடிவை எடுக்க வேண்டும்

நாடு தொடர்பில் சிந்தித்து அனைத்து இனத்தவர்களும் ஒன்றிணைந்து சரியான அரசியல் முடிவை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்துக்குரிய அத்துரலிய ரதன தேரர் தெரிவித்தார்.

நேற்று (09) கெடம்பே ராஜோபவனாராமயவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

தான் எடுத்த தீர்மானத்தின் பின்னர் பாரியளவில் சமூக அவதூறுகளுக்கு முகங்கொடுக்க தனக்கு நேர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என தெரிவித்த அவர், எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் முழுவதுமாக அனைத்து அபிலாஷைகளும் அழிக்கப்பட்டதாக ரதன தேரர் இதன்போது தெரிவித்துள்ளார்.