அனுஷ்கா கோவில்களை சுற்றுவதற்கு இதுதான் காரணமா?

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் அனுஷ்கா. அருந்ததி, பாகுபலி படம் மூலம் தனி நாயகனுக்குரிய மார்க்கெட்டை உருவாக்கிவிட்டார். அனுஷ்காவுக்கு இப்போது வயது 37. கடந்த சில ஆண்டுகளாகவே அனுஷ்கா விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக செய்திகள் வந்தன.

ராணா, ஆர்யா, நாகசைதன்யா என்று பல ஹீரோக்களுடன் கிசுகிசுக்கப்பட்ட அனுஷ்கா பிரபாஸை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வந்தது. புதிய படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் இருந்த அனுஷ்கா திடீரென்று மீண்டும் படங்களில் பிசியாகி இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அனுஷ்காவை முதன்மை கதாநாயகியாக்க இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் முயன்றுகொண்டிருக்க அவரோ மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அனுஷ்காவுக்கு ஜாதகத்தில் ஏதோ தோ‌ஷம் இருப்பதால் தான் திருமணம் தடைபடுகிறது. அந்த தோ‌ஷத்தை நிவர்த்தி செய்ய கோவில் கோவிலாக சுற்றி வருகிறார் அனுஷ்கா என்கின்றன தெலுங்கு வட்டாரங்கள்.

LEAVE A REPLY