அந்தஸ்தை இழந்த மஹிந்த! மீண்டும் கைப்பற்றுவாரா சம்பந்தன்?

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்திற்கு நேற்றைய தினம் திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்ற சுதந்திரக் கட்சி எம் பிக்களை சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்குமாறு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் அங்கு கோரியதாவது,

அவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து நீக்கப்படும் தேசியப்பட்டியல் எம் பிக்களின் இடங்களுக்கு புதியவர்களை நியமிக்குமாறும் மைத்திரிக்கு கூறியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்றதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்திருப்பதால் முன்னைய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கலாமெனவும் அவர் இதன்போது மைத்திரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக பதில் எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் சுதந்திர கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.