அதிர்ச்சியில் பிருத்விராஜ் பட இயக்குனர்..!

தற்போது பிருத்விராஜ் – பார்வதியை வைத்து ‘மை ஸ்டோரி’ என்கிற படத்தை இயக்குவதுடன் தானே தயாரிக்கவும் செய்கிறார் ரோஷினி தினகர் என்கிற பெண் இயக்குனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்தபடத்திற்கு பிருத்விராஜ் சரியாக கால்ஷீட் ஒதுக்க மறுக்கிறார் என ஒரு சர்ச்சையை கிளப்பினார் ரோஷினி தினகர். ஒருவழியாக அந்த பஞ்சாயத்து முடிந்து தற்போது முக்கால்வாசி படம் முடிவடைந்துள்ளது.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன் வெளியான இந்தப்படத்தின் பாடல் காட்சிக்கு யூடியூப்பில் லைக்குகளை விட டிஸ்-லைக்குகள் வெகுவாக குவிந்து வருகின்றன. நேற்று 65 ஆயிரமாக இருந்த இந்த எண்ணிக்கை இன்று ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

இதற்கு காரணம் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பார்வதி, சமீபத்தில் மம்முட்டி குறித்து விமர்சித்தது தான். அவருக்கு எதிர்ப்பை காட்டவே மம்முட்டி ரசிகர்கள் இந்த அதிரடியில் இறங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குனர் ரோஷினி தினகர், “பார்வதி சொன்ன கருத்துக்காக என் படத்தின் மீது ஏன் உங்கள் கோபத்தை காட்டுகிறீர்கள்” என அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்..

LEAVE A REPLY