அதிரடியாக ராஜினாமா செய்தார் ஹேமசிறி பெர்னாண்டோ!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ அவரது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.

குறித்த இராஜினாமா தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.

கடந்த ஈஸ்டர் தின தாக்குதலை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை பதவி விலகுமாறு அறிவித்தார்.

இதனை அடுத்து இன்று ஹேமசிறி பெர்னாண்டோ தனது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் புதிய பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.