அதிக வருமானம் ஈட்டும் வீராங்கனையாக ஷெரீனா மீண்டும் தெரிவு

உலகில் அதிக வருமானத்தை ஈட்டும் வீராங்கனைகள் பட்டியலில் அமெரிக்காவின் டெனிஸ் வீராங்கனை ஷெரீனா வில்லியம் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளார். ‘ஃபோர்ப்ஸ்’ சஞ்சிகையின் இந்தத் தரப்படுத்தலில் முதல் 10 இடங்களில் எட்டு இடங்களில் டெனிஸ் வீராங்கனைகளே காணப்படுகின்றனர்.

கடந்த வருடத்தில் ஷெரீனா வில்லியம்ஸ் 62 ஆயிரம் அமெரிக்க டொலர்களை பரிசுகளிலிருந்து மாத்திரம் ஈட்டியுள்ளார். குழந்தை பரசவிப்பதற்கான 14 மாதங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டபோதும் 18 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியிருப்பதாக ஃபோர்ப்ஸ் சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.

பட்மின்டன் வீராங்கனையான பி.வி.சிந்து மற்றும் ஓட்டப்பந்தய கார் வீராங்கனையான டனிக்கா பட்ரிக்ஸ் ஆகிய இருவருமே முதல் 10 இடங்களைப் பெற்ற வீராங்கனைகளில் டெனிஸ் விளையாட்டைச் சேராத வீராங்கனைகளாகும்.

இந்தப் பட்டியலில் முதல் 10 இடத்தைப் பிடித்துள்ள வீராங்கனைகள் 2017ஆம் ஆண்டு ஜூன் முதல் 2018ஆம் ஆண்டு ஜூன் வரையான ஒருவருட காலப் பகுதியில் 105 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளனர்.

இதற்கு முந்தைய வருடத்துடன் ஒப்பிடும்போது இது நான்கு வீத வீழ்ச்சி என்பதுடன், ஐந்து வருடங்களுக்கு முன்னரான நிலைமையுடன் ஒப்பிடும்போது 28 வீத வீழ்ச்சியாகும் என ​ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஷெரீனா வில்லியம்ஸின் மொத்த வருமானமானத்தின் அடிப்படையில் கடந்த மூன்று வருடங்களும் அவரே தொடர்ச்சியாக முதலாவது இடத்தில் காணப்படுகின்றார்.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கரோலின் வோஸ்னியாகி இரண்டாவது இடத்தில் காணப்படுகின்றார். இந்த வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியா ஓபன் டெனிஸ் போட்டியில் கிரான்ட்ஸ்லாம் பட்டத்தை இவர் வென்றிருந்ததுடன், இதன் மூலம் 3.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வென்றிருந்தார். இதன்மூலம் அவருடைய மொத்த வருமானம் 13 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது.

இவருக்கு அடுத்ததாக முறையே ஸ்லேன் ஸ்டீபன்ஸ், கார்பின் முகுருசா மற்றும் மரியா ஷரபோவா ஆகியோர் காணப்படுகின்றனர். ரஷ்யாவின் டெனிஸ் வீராங்கனையான ஷரபோவா அதிக வருமானம் ஈட்டும் வீராங்கனைகள் பட்டியலில் கடந்த 11 வருடங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறார்.

ஒலிம்பிக் போடடியில் வெண்கலப்பதக்கம் வெற்ற இந்தியாவின் பட்மின்டன் வீராங்கனையான சிந்து ஏழாவது இடத்திலும், கார் பந்தய வீராங்கனை பட்ரிக்ஸ் ஒன்பதாவது இடத்திலும் காணப்படுகின்றனர். சிந்துவின் வருமானம் 8.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.