அதிக வயதுடையவர்களைக் கொண்டதாக இலங்கை நாடாளுமன்றம்!

Sri Lankan members of parliament listen to President Mahinda Rajapakse’s speech at a parliament meeting.
2018 ஆம் ஆண்டில் அதிக வயதுடைய பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டதாக இலங்கை நாடாளுமன்றம் அமையும். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் 70 வயதுடையவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலர் அந்த வயதை நெருங்கியவர்களாக இருப்பர் என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் கணிப்பின்படி, நாடாளுமன்றத்தின் மூன்று உறுப்பினர்கள் 2018 இல் 70 வயதை எட்டியுள்ளதால் இலங்கையின் நாடாளுமன்றில் 70 வயதை அடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இதனைவிட 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 69 வயதையும் நான்கு உறுப்பினர்கள் 65 வயதையும் எட்டியுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் தற்போதைய நிபந்தனைகள் 2020 இல் முடிவடைகின்றபோது உறுப்பினர்களில் 19 வீதத்தினர் 70 வயதைத் தாண்டியவர்களாக இருப்பார்கள்.

எவ்வாறெனினும், இலங்கை எதிர்நோக்கும் பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக முதியோர் பிரச்சனை காணப்படுகின்றது.

இது 2021 இல் 16.7 வீத்திற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற வேளை 2012 இல் 12.5 ஆக இருந்த சனத்தொகையில் 2.5 மில்லியன் படிப்படியான வளர்ச்சியாக காணப்படுகின்றது. இலங்கை சனத்தொகையின் கால்வாசிப் பகுதி 2041ஆம் ஆண்டளவில் வயது முதிர்ந்தோராக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY