அதிகாரப் பகிர்வு பற்றிய எண்ணம் சிங்களவர்களிடம் மாற்றம் – கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண எம்.பி. தெரிவிப்பு

“அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பில் சிங்களவர்க ளின் நிலைப்­பாட்­டில் மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. தென்­ப­குதி முத­ல­மைச்­சர்­க­ளும், எதிர்க்கட்­சித் தலை­வர்­க­ளுமே மாகாண சபை­க­ளுக்கு அதி­க­ளவு அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட வேண்­டும் என்று கேட்­கின்­ற­னர்” இவ்­வாறு புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் வழி­ந­டத்­தல் குழு­வின் முக்­கிய உறுப்­பி­ன­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ ரட்ண தெரி­வித்­தார்.

புதிய அர­ச­மைப்பு உரு­ வாக்­கம் தொடர்­பில் பொது­மக்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கும் கலந்­து­ரை­யா­டல் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் ஒட்­டு­சுட்­டான் நக­ரில் நேற்று நடை­பெற்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி சாந்தி சிறீஸ்­கந்­த­ராசா, புதிய அர­ ச­மைப்பு உரு­வாக்­கப் பணி­க­ளில் ஈடு­பட்­டுள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ண ஆகி­யோ­ரும் இதில் கலந்து கொண்­ட­னர்.

முதலில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பரி விக்கிரமரட்ண, “1987ஆம் ஆண்டு அதிகாரப் பகிர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது அதனை எதிர்த்து நின்ற மக்கள் விடுதலை முன்னணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன அதற்குத் தற்போது இணங்கியுள்ளன.

தற்போது அதிகாரப் பகிர்வை தெற்கில் உள்ளவர்கள்தான் கோரி நிற்கின்றார்கள். தென்பகுதி முதலமைச்சர்களும், எதிர்கட்சித் தலைவர்களுமே மாகாண சபைகளுக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்கின்றனர். அதிகாரப் பகிர்வு தொடர்பான நிலைப்பாடு தற்போது மாறியுள்ளது.

தற்போதுள்ள தருணத்தை உபயோகித்து புதிய அரசமைப்பை நிறைவேற்ற முடியும். நாடாளுமன்றத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது. மக்கள் மத்தியிலும் சாதகமான நிலைமைகள் இருக்கின்றது. சந்தர்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” – என்றார்.

“வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப் பெறக் கூடாது என்ற கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு இணங்க, அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதற்குச் சந்தர்ப்பம் உள்ளது” என்று இந்தக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

மக்கள் கேள்வி கேட்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன்போது பல கேள்விகள் எழுப்பப்பட்டன. பெரும்பாலான கேள்விகள், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பிலேயே அமைந்திருந்தன. இலங்கை மதச் சார்பற்ற நாடு என்று நீதிமன்றத் தீர்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்ததை இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி சுட்டிக்காட்டினார்.

1 COMMENT

  1. இந்தக் கூட்டம் தமிழர் மத்தியில் நடத்துவதை நிறுத்திவிட்டு சிங்களக் குக் கிராமங்களில் மகிந்த ராஜபக்‌ஷ,விமல் வீரவன்ச, தம்பிக்க ரணவத்த, ஞானசார தேரர் போன்ற வர்கள் முன்னிலையில் பேச ட்டும். சுமந்திரனும் சம்பந்தனும் கூட்டாகப் பேசிவிட்டு வடக்கு மக்களிடம் பேசட்டும்.

LEAVE A REPLY