அதிகாரத்தை பயன்படுத்தி அரசாங்கம் அச்சுறுத்துகின்றது – மஹிந்த குற்றச்சாட்டு!

அதிகாரத்தை பயன்படுத்தி அனைவரையும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு கூட தீர்வை பெற்றுக் கொடுக்காத அரசாங்கம் இன்று இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இதன் பின்னர் தமது கோரிக்கைகள் அடைங்கிய மனுவை சமர்ப்பிக்க சென்ற வேளையில் பொலிஸ் தரப்பினர் நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர் புகை தாக்குதலையும் மேற்கொண்டனர்.

இந்த சம்பவமானது முறையற்ற செயற்பாடாகும் என தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மீது குற்றம் சாட்டியுள்ளார்.