அடுத்த சில மாதங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது – சயிட் அல் ஹ_செய்ன்

al hussain 12_CIஅடுத்த சில மாதங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அணையாளர் சயிட் அல் ஹ_செய்ன் தெரிவித்துள்ளார்.ஐக்கி நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31ம் அமர்வுகளில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிலையான சமாதானம், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன தொடர்பில் அதன் பாதையில் பயணித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் நோக்கிய நகர்விற்கான சில அறிகுறிகள் தென்படுவதாகவும் உதாரணமாக தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதனை குறிப்பிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான பிரச்சினை போன்றன தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கான இடைக்கால நீதிப்பொறிமுறைமை மற்றும் தேசிய இணக்கப்பாட்டை ஏற்படுத்தல் தொடர்பில் இலங்கை எதிர்வரும் மாதங்களில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் எவ்விதமான அடக்குமுறைகளுக்கும் கண்காணிப்பிற்கும் உட்படுத்தப்படாது சுதந்திரமான முறையில் தங்களது கருத்துக்களை வெளியிடக்கூடிய ஓர் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உரிமை மீறல்கள் தொடர்பில் கிரமமான விசாரணை நடாத்தி தீர்வு வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள அமர்வுகளில் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அறிக்கையிட எதிர்பார்ப்பதாக அல் ஹ_செய்ன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY