அஜீத்தின் வீட்டு வாசல் படியைக் கூட மிதிக்கக் கூடாது : கருணாஸ் காட்டம்

1445938011-7254நடிகர் அஜீத்தின் வீட்டு வாசல்படியை மிதிக்கக்கூடாது என்று நடிகரும் நடிகர் சங்கத் துணை தலைவருமான கருணாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பொதுவாக நடிகர் அஜீத் சினிமா சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. சினிமா கலைஞர்கள் மரணத்திற்கும் அவர் போவதில்லை. இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இயக்குனர் பாலசந்தர் ஆகியோர் மறைந்த போதும் கூட துக்க நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை.

 

அதுகூட பரவாயில்லை. நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக அஜீத்தை சந்திக்க விஷால் எவ்வளவு முயன்றும் அதை அஜீத் தவிர்த்தார். மேலும், பத்து வருடங்களுக்கு பிறகு  நடந்த   நடிகர் சங்கத் தேர்தலில் அவர் ஓட்டுப் போட கூட வரவில்லை. இது சினிமா வட்டாரத்தில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இதையெல்லாம் மனதில் வைத்துதான் கருணாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் “நடிகர் சங்க கலை நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் நடந்தால், அஜித்தை அழைப்பதில்லை,எந்த சிறு உதவிக்கும் அவர் வீட்டு வாசல் படியை மிதிக்கக் கூடாது” என்று கோபமாக கூறியிருக்கிறர் என்று தெரிகிறது

LEAVE A REPLY